Pages

Tuesday, February 8, 2011

கர்நாடக சங்கீதம் - அறிமுகம் -3

கர்நாடக சங்கீதம் - அறிமுகம்  - தொடர்ச்சி :

சரி , அடுத்த பகுதிக்குப் போவோம் .



இது வரை , சில விளக்கங்களைப் பார்த்தோம் .
--  ஏழு ஸ்வரங்கள்
--  ஒரு பாட்டின் கட்டமைப்பு  (பல்லவி, அனு பல்லவி , சரணம் -1 , சரணம் -2 )
--  ஏழு ஸ்வரங்களுக்கும் சரியான மேற்க்கத்திய நோட் .


இனி மேல் ,


ஏற்கனவே சொன்னது போன்று , ஏழு ஸ்வரங்களில் ச மற்றும் ப நிலையானவை. மற்ற ஐந்துக்கும் 2  ஸ்தானங்கள் உண்டு . ஆக, மொத்தம் 12 ஸ்வர ஸ்தானங்கள் .


கர்நாடக சங்கீதத்தில் , முக்கிய "ஸ்தாயி" ஆக "மத்திய" ஸ்தாயி சொல்லப்படுகிறது . 
(We can equate Middle-C in the Western Music system).
"மத்திய" ஸ்தாயிக்கு ஒரு படி மேலே உள்ளது "தர" ஸ்தாயி .
"மத்திய" ஸ்தாயிக்கு ஒரு படி கீழே உள்ளது "மந்திர" ஸ்தாயி ( manthras are normally chanted in low-frequencies).

மேள கர்த்தா முறை:

17 ஆம் நுற்றாண்டு வாக்கில் , 'வேங்கட மகி ' என்கிற இசைப் புலவர் பொதுவாக ராகங்களை வகைப் படுத்தும் முறையை செழுமைப் படுத்தினார்.
அந்த முறை 'மேள கர்த்தா' முறை என அழைக்கப் படுகிறது.  இந்த முறையை 'அட்டவணை' போன்று ஏற்படுத்தினார்.
 ஹிந்துஸ்தானியில் ,  இதற்கு நிகரானது 'thaat' என அழைக்கப் படுகிறது . 72 ராகங்கள் இந்த முறையில் அமைந்தவை. இவற்றுக்கு 'சம்பூரண ராகங்கள்' எனவும் பெயர் உண்டு.

ஒரு ராகம் 'மேள கர்த்தா' முறையின் கீழ் வர, சில விதிகளை ஒற்றி இருக்க வேண்டும். 

1. 'ச' ஸ்வரம் கட்டாயம் இருக்க வேண்டும்.

2. 'ப' ஸ்வரமும் கட்டாயம் இருக்க வேண்டும்.

3. 'ம' ஸ்வரங்களில் ஒன்று இருக்க வேண்டும் (ம1 அல்லது ம2).

4. ஒரு 'ர' வும் , ஒரு 'க' வும் இருக்க வேண்டும்.

5. ஒரு 'த'வும் , ஒரு 'நி' யும் இருக்க வேண்டும்.

6. 'க' வுக்கு முன் 'ர' வும் , 'நி' க்கு முன் 'த' வும் வர வேண்டும்.

இப்படி மேற்கூறிய விதிகள் மூலம் , 72 (2 x 6 x 6) ராகங்கள் கிடைக்கின்றன .

மேலோட்டமாக , இந்த 72 ராகங்களை , இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம் .
அவை 'சுத்த மத்யமம்' மற்றும் 'பிரதி மத்யமம்'. ஒவ்வொரு பிரிவுக்கும் 36 ராகங்கள் .  'சுத்த மத்யமா' த்தில் 'ம1' வும் , 'பிரதி மத்யமா' த்தில் 'ம2' பயன் படுத்தப் படுகிறது. 

இதன் பிறகு, விரிவாக பிரித்தோம் என்றால் ,  12 பிரிவுகளாக பிரிக்கலாம் . அவை 'சக்ரா' என அழைக்கப்படும் . ஒவ்வொரு 'சக்ரா' க்கும் , 6 ராகங்கள் .

அந்த 'சக்ரா' க்கள் :

1. இந்து சக்ரா 

2. நேத்ரா சக்ரா 

3. அக்னி சக்ரா 

4. வேதா சக்ரா 

5. பான சக்ரா (Related to manmadha)

6. ருது சக்ரா 

7.  ரிஷி சக்ரா 

8.  வாசு சக்ரா 

9. பிரம சக்ரா 

10.  டிசி (திசை ) சக்ரா 

11.  ருத்ர சக்ரா

12.  ஆதித்ய சக்ரா 

இங்கே மொத்த 'மேள கர்த்தா' அட்டவணை:

1.  இந்து சக்ரா :

   கனகாங்கி
   ரத்னாங்கி 
   கானமூர்த்தி
   வனஸ்பதி 
   மானவதி
   தனருபி
  
2. நேத்ரா சக்ரா:
   சேனாவதி
   ஹனுமதோடி 
   தேனுகா
   நாடகப்ரியா
   கோகிலப்ரியா 
   ரூபாவதி

3.  அக்னி சக்ரா 

   காயகப்ரியா 
   வகுலபாரணம் 
   மாயாமாளவகௌள
   சக்ரவாகம் 
   சூர்யகாந்தம் 
   ஹடகம்பாரி


4.  வேதா சக்ரா:
   
     ஜ்ஹங்கரத்வனி 
     நடபைரவி 
     கீரவாணி 
     கரஹரப்ப்ரியா 
     கெளரி மனோஹரி 
     வருண ப்ரியா 
       
5.   பான சக்ரா :

      மர ரஞ்சனி 
      சாரு கேசி 
      சர சாங்கி 
      ஹரி காம்போகி 
      தீரா சங்கராபரணம் 
      நாக நந்தினி 

6.  ருது சக்ரா :
 
     யாக ப்ரியா 
     ராக வர்தினி 
     காங்கேய பூஷணி 
     வாகதீஸ்வரி 
     ஷுலினி 
     சாலநட

7.  ரிஷி சக்ரா :

     சாலகம் 
     ஜலர்ணவம் 
     ஜ்ஹலவரலி 
     நவநீதம் 
     பாவனி
     ரகுப்ரியா 

8.  வாசு சக்ரா:

     கவம்போதி 
     பாவப்ரியா
     சுப பந்துவராளி 
     ஷட்விதமர்கினி 
     சுவர்ணாங்கி 
     திவ்யமணி 

9. பிரம்மா சக்ரா :

     தவலம்பரி 
     நாம நாராயணி
     காம வர்தனி
     ராம ப்ரியா
     கமனஸ்ராம 
     விஸ்வம்பரி 

10. டிசி சக்ரா (திசை )

      ஷமளாங்கி 
      ஷண்முக ப்ரியா
      சிம்மேந்திர மத்யமம் 
      ஹேமவதி
       தர்மவதி 
       நீதிமதி 
   
11.  ருத்ர சக்ரா :
  
       கண்ட மணி 
       ரிஷப ப்ரியா 
       லதாங்கி 
       வாசஸ்பதி 
       மெச்சகல்யாணி 
       சித்ராம்பரி 

12.  ஆதித்ய சக்ரா :

        சுசரித்ரா 
        ஜோதி ஸ்வருபிணி
        தடுவர்தினி 
        நசிக பூஷணி 
        கோசலம் 
        ரசிக ப்ரியா 

இந்த 'அட்டவணை' யை , இன்னும் படமாக (visualize) காண வேண்டுமென்றால் , கீழ் வரும் சுட்டியை தொடரவும் 


மேலே சொல்லப் பட்ட ராகங்கள் அனைத்தும் 'சம்பூரண' ராகங்களாகும் . (ஏழு ஸ்வரங்களும் உள்ளன ).

இதனுடைய பகுதி ராகங்கள் (subset ) 'ஜன்ய' ராகங்கள் எனப் படும். 

அடுத்த பகுதியில் ,
  - தாளம், அதன் வரலாறு 
  - சுருதி 
 - ஆரோஹனம் 
 - அவரோஹனம் 
 - பாடல் இயற்றியவர்கள் 


-- தொடரும் .....

 
 

2 comments:

  1. இந்த பதிவை பத்திரமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்.... என்னை போல சங்கீதம்னா கிலோ என்ன விலை என்று இருப்பவர்களுக்கு, தகவல் களஞ்சியமாக இந்த பதிவு அமைந்து உள்ளது. பகிர்வுக்கு ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  2. நன்றி சித்ரா!!!

    இதைத் தொகுக்க நிறைய கால அவகாசம் தேவைப்பட்டது .

    ReplyDelete