Pages

Sunday, February 6, 2011

(07-Feb-2011) செய்திகள் வாசிப்பது.....


பொது:

வட கிழக்கு அமெரிக்கா, சென்ற வாரத்தில் மற்றொரு பெரிய பனிப்பொழிவை சந்தித்தது . ஏறத்தாழ 2500 மைல்களுக்கு பாதிப்பு இருந்தது .  பனிப்பொழிவு இருக்கும் போதே மின்னலும் இருந்தது .

பனி மலைகளாக எங்கு காணினும் இருந்தது . இது போன்ற தொடர் பனிப் பொழிவுகளால் வரும் கோடைக் காலத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை இருக்காது என நம்பப் படுகிறது .


அரசியல்:

எகிப்த்தில்  நடை பெரும் புரட்சி நிகழ்வுகள் பல திருப்பங்களை சந்தித்திருக்கிறது .
மக்களின் உயிரிழப்பு பெரும் வேதனை அளிக்கிறது . பெரும் திரளான மக்கள் இன்னும் ஆட்சி மாற போராடிக் கொண்டிருக்கிறார்கள் . வரும் நாட்கள் ஒரு முடிவுக்கு வழி வகுக்கும் என நம்பலாம் .

தமிழகத்தில் , வரும் மே மாதத் தேர்தலை முன்னிட்டு , அரசியல் விளையாட்டுகள் துவங்கி விட்டன .


விளையாட்டு:

 அமெரிக்காவில் இன்று (Sunday)  'Super Bowl'  நடைபெறுகிறது .  அதிக பீர் , அதிக pizza, அதிக  snacks விற்பனையாகி , உட்கொள்ளப் படும் நாட்களில் ஒன்று இது .

ஆசி ஓபன் இறுதிப் போட்டியின் முடிவுகள் , இங்கிலாந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தர வில்லை .


இயல்,இசை& நாடகம்:

'யுத்தம் செய்'  திரைப் படம் பல தரப்பட்ட, கலவையான விமர்சனக்களை பெற்று இருக்கிறது .

வணிகம்:
அமெரிக்காவில், verizon phone நிறுவனம் , தனது iPhone ஐ களத்தில் இறக்கி இருக்கிறது. வரும் வாரங்களில் அதன் விற்பனை நிலவரம் தெரிய வரும்.


உலக அளவில் 'crude oil' விலை உயர்ந்து இருக்கிறது . எகிப்தின் அரசியல் நிலை உட்பட பல காரணங்கள் சொல்லப் படுகிறது .


தொழில் நுட்பம்:


இன்டர்நெட் IP அட்ரஸ்கள் , நிலுவையில் உள்ளவை முழுமையாகத் தீர்ந்து விட்டன . IPv4 லிருந்து IPv6 க்கு மாறுகிறது. ஆனால், நம்மைப் போன்ற வாடிக்கையளர்களுக்கு எந்த வேறுபாடும் தெரியாது 

-- தொடரும் 


1 comment:

  1. அமெரிக்காவில் இன்று (Sunday) 'Super Bowl' நடைபெறுகிறது . அதிக பீர் , அதிக pizza, அதிக snacks விற்பனையாகி , உட்கொள்ளப் படும் நாட்களில் ஒன்று இது .


    ...And Green Bay Packers WON!!!!!!!! Yahooooooo!!!!

    ReplyDelete