Pages

Sunday, January 30, 2011

(30-Jan-2011) செய்திகள் வாசிப்பது.....

இன்று முதல் வாரம் ஒரு முறை , அனைத்து அந்த வார நிகழ்வுகளையும் தொகுத்து வழங்க உள்ளேன் . பதிவுலக வாசகர்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன் .

பொது:

வட கிழக்கு அமெரிக்கா, சென்ற வாரத்தில் மற்றொரு பெரிய பனிப்பொழிவை சந்தித்தது . சென்ற வருடங்களை விட , அங்கு இந்த வருடம் பனிப்பொழிவு அதிகம் .

தமிழகம் அடுத்த கோடைக்குத் தயாராகி வருகிறது . இப்பொழுதெல்லாம் பிப்ரவரி , மார்ச் மாதங்களிலேயே கோடையின் வெப்பம் உணரப்படுகிறது .

இன்று மகாத்மா காந்தியின் நினைவு நாள் . எத்தனை பேருக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ தெரிய வில்லை . ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று 'சத்திய சோதனை' .

அரசியல்:

தமிழகம் அடுத்த பொதுத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறது . இனி வரும் நாட்களில் எல்லா வாதமான அரசியல் வேடிக்கைகளும் நடக்கும், பார்க்கலாம் .
இந்த தேர்தலில் மின்னணு எந்தரமா , வாக்குச்சஈட்டா , எத்தனை கட்ட வாக்குப்பதிவு , விவரங்கள் தெரிய வரும் கூடிய விரைவில். 

மற்றுமொரு தமிழக மீனவன் சாவு , மிகுந்த வேதனையை அளிக்கிறது .  என்று நிற்கும் இந்த வேதனை, இந்த தொடர் வன்முறை ? யார் வருவார்  தீர்வு காண ?

ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான எகிப்த்தில் கடந்த ஒரு வாரமாக நடை பெரும் நிகழ்வுகள் ஒரு பெரிய 'மாற்றத்துக்கு' வழி வகுக்குமா என இனி வரும் வாரங்களில் 
தெரிய வரும்.  மக்களின் உயிரிழப்பு பெரும் வேதனை அளிக்கிறது . மக்களும், அவர்களுடைய ஒரு மித்த குரலையும் மீறி வேறு ஒன்றும் இல்லை என்பது புலனாகிறது .

அமெரிக்கா அதிபரின் 'State of the Union'  பேச்சு , வரும் நாட்களில் 'பொருளாதார' மாற்றத்தை ஏற்படுத்துமா என தெரிய வில்லை .

விளையாட்டு:

 அமெரிக்கா அடுத்த 'Super Bowl' க்கு தயாராகி வருகிறது . அடுத்த ஞாயிறு இறுதிபோட்டி.

இந்தியாவில் , IPL தொடருக்கான வேலைகள் , விளம்பரங்கள் ஆரம்பித்து விட்டன .

' Kim Clijsters' இன் ஆசி வெற்றி பிரமிக்க வைக்கிறது . மகப்பேறுக்கு பிறகு கிடைக்கும் மூன்றாவது பெரிய வெற்றி இது. 
'Nadal' மற்றும்  'Federer'  தோல்வி அதிர்ச்சியானது .

இந்தியாவின் 'பூபதி' மற்றும் 'பயஸ்' இரட்டையர் இறுதிச்சுற்று தோல்வி வருத்தமே.

இயல்,இசை&நாடகம்:

ரஹ்மான் மற்றுமொரு அவார்டு பெற்றது மிக்க மகிழ்ச்சி . 
ஆஸ்கார்க்கு முன்னோட்டம் என அழைக்கப்படும் 'SAG' awards, இன்று நடை பெறுகிறது .

'கோ' படப் பாடல்கள் , மற்றுமொரு ஹரிஸ் ஜெயராஜின் ஹிட் படைப்பு எனத் தொன்றுகிறது.

வணிகம்:

உலக பொருளாதார மாநாடு இன்று முடிவடைந்தது. சந்திரா கொச்சார் (ICICI Bank) மற்றும் விப்ரோ பிரேம்ஜின் பேட்டிகள் அருமை .

உலக அளவில் , கச்சா எண்ணையின் விலை ஏற்றம் வருந்த வைக்கிறது .

தொழில் நுட்பம்:

போன் நம்பர் போர்டிங் இந்தியாவில் மிக முக்கிய நிகழ்வாகும் . மிக வரவேற்க தக்கது .

motorola வின் 'Zoom' tablet கணிப்பொறி , google- இன் 'Honey Comb' ஐ அடிப்படையாகக்கொண்டது .விரைவில் வெளி வரும்.

-- தொடரும் 


Thursday, January 27, 2011

சிந்திக்க வைத்த புத்தாண்டு வாழ்த்துகள்

என்னுடைய குடும்ப நண்பர் ஒருவர் , இதை எனக்கு இமெயிலில் அனுப்பினார்.
(நன்றி: திரு. ஆறுமுகம் , திரு.சுப்ரமணியன் )
படிக்க, சிந்திக்க:

உறவுகள் மேம்பட
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்....
குடும்பத்திலும் சரி  அலுவகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகமல் இருக்கவும் கடைப்பிடிக்க வேண்டியவை.

-=-==============================================================

  • நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
  • அர்த்தமில்லாமலும், பின் விளைவுகளை அறியாமலும் பேசிக்கொண்டே இருப்பதை விடுங்கள்.
  • எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசூக்காகக் கையாளுங்கள். விட்டுக் கொடுங்கள்
  • சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணருங்கள்.
  • நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள் குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
  • உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்லவும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
  • மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.
  • அளவுக்கதிகமாய், தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
  • எல்லாரிடத்திலும் எல்லா விஷயங்களை அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிரூக்காதீர்கள்.
  • கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்
  • அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள்.
  • உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
  • மற்றவர் கருத்துகளில் செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்
  • மற்றவர்களுக்குரிய மரியாதையைக் காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
  • புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாததுபோல் நடந்துகொள்ளாதீர்கள்.
  • பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும்  காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
  • அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
  • பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சைத் துவக்க முன்வாருங்கள்.
சென்ற 2010-ஆம் ஆண்டில் நாம் கடைப்பிடிக்கவிட்டுப் போனவற்றை 2011-ஆம் ஆண்டில் கடைப் பிடிப்போம்.
வெ.சுப்பிரமணியன்
ஓம்

Wednesday, January 26, 2011

பாடல்கள் , ராகங்கள் தொகுப்பு - 2

பாடல்                                        ராகம்                                தாளம்              இயற்றியவர்


6.பலுகே பங்காரம்                              ஆனந்த பைரவி                      ஆதி                        ஸ்ரீ ராமதாசு 


7.பிபரே ராம ரசம்                               யமன் கல்யாணி/                  ஆதி                        சதாசிவ ப்ரமேந்த்ரர் 
                                                                  ஆஹிர் பைரவி                                                                                            


8.பஜரே கோபாலம்                     ஹிந்தோளம்                    ஆதி                  சதாசிவ ப்ரமேந்த்ரர் 


9.நீ தயா ராதா                                       வசந்த பைரவி                       ரூபகம்                  தியாகராஜர்  


10.காக்கை சிறகினிலே                     பிருந்தாவன சாரங்கா         ஆதி                       பாரதியார்  


11.நிற்பதுவே நடப்பதுவே              கல்யாணி                                  ஆதி                       பாரதியார்  


12.குழலூதி மனமெல்லாம்            காம்போதி                                  ஆதி                     ஊத்துக்காடு வேங்கட 
                                                                                                                                                          சுப்பையர்  


13.கல்யாண கோபாலம்                    சிந்து பைரவி/                          ஆதி                      நாராயண தீர்த்தர் 
                                                                   கமவர்தனி  

14.கிருஷ்ணா நீ பேகனே                  யமன் கல்யாணி                    சாபு                       வியாசதீர்த்தர்

-- தொடரும்

Monday, January 24, 2011

பாடல்கள் , ராகங்கள் தொகுப்பு - 1

இந்தத்தொடரில்  பல்வேறு பாடல்களையும் மற்றும் அதன் ராகம், தாளம் , இயற்றியவர் பற்றிய விவரங்களையும் தொகுக்க உள்ளேன். 


இன்று தியாகராஜர் ஆராதனை . எனவே, அவரிலிருந்து ஆரம்பிப்போம் .


பாடல்                                        ராகம்                                தாளம்              இயற்றியவர்


1.எந்தரோ மகானுபாவலு                ஸ்ரீ ராகம்                                   ஆதி                        தியாகராஜர்


2.அலைபாயுதே                          கானடா                             ஆதி                   ஊத்துகாடு 
                                                                                                                                                               வேங்கடசுப்பையர்


3.காமாக்ஷி வரலக்ஷ்மி            பிலஹரி                          ஆதி                    முத்துசுவாமி  தீட்சிதர்




4.என்ன தவம் செய்தனை       காபி                                   ஆதி                    பாபநாசம் சிவன்


5.சின்னசிறு பெண் போலே    சிந்து பைரவி                    ஆதி                    உளுந்தூர் பேட்டை    
                                                                                                                           சண்முகம்


-- தொடரும் ....

இன்று தியாகராஜர் ஆராதனை - 24 Jan 2011

இன்று தியாகராஜர் ஆராதனை

கர்நாடக இசையின் மும் மூர்த்திகளில் முக்கியமான ஒருவர். தியாகராஜர் என்றால் நினைவுக்கு வருவது கீழ்க்கண்டவை :

              திருவையாறு ஆராதனை
              எந்தரோ மகானுபாவலு
              குன்னக்குடி வைத்யநாதன்
              மூப்பனார் 
              அதீத மேக்கப் உடன் மேல் தட்டு மாமிகள் வரிசையாய்

திரு.RVS அவர்கள் மிக அழகாக இதைப்பற்றி எழுதியுள்ளார்கள் .

இதைப்படிக்கவும் :

http://mannairvs.blogspot.com/2011/01/blog-post_23.html
(நன்றி திரு.RVS)

Thursday, January 20, 2011

கர்நாடக சங்கீதம் - அறிமுகம் -2

நான் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது இந்தத்தொடருக்கு .
-  நன்றிகள் பல

தொடரின் அடுத்த பகுதிக்குச்செல்லுமுன் , ஒரு அன்பர் எழுப்பிய வினாவிற்கு விளக்கம் தர முயலுகிறேன் .

--  கர்நாடக சங்கீதம் - என்ன விளக்கம் ? என்ன வரையறை?

சென்ற இரு நாட்களாக அதற்கான விளக்கம் தேடிக்கொண்டு இருந்தேன் .
கர்நாடக சங்கீதத்தில் நாட்டமும் , பரிச்சயமும் உள்ள என் தந்தையாரிடம் கூடக்கேட்டேன் .  நிறைய வலைத்தளங்களிலும்  தேடினேன் .  ஆனால் , தெளிவான ஒரு விளக்கம் எனக்குக்கிடைக்கவில்லை.

நான் தொகுத்த வரை :
   கர்நாடக சங்கீதம் என்பது இந்தியாவின் தொன்று தொட்ட இரு சங்கீத முறைகளில் ஒன்று.  வாத்தியங்களை விட குரல் வழி இசைக்கு முக்கியத்துவம் தந்த ஒரு முறையானது .

கர்நாடகம் என்பது 'பழைமை'யைகுறிக்கும் வழக்குச் சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்கள் அளிக்க முயலுகிறேன் . கேள்வி கேட்ட அன்பருக்கு மிக்க நன்றி .

கர்நாடக சங்கீதம் - அறிமுகம்  - தொடர்ச்சி :

கர்நாடக சங்கீதத்தில் உள்ள ஏழு ஸ்வரங்களுக்கும் சரியான மேற்க்கத்திய notes உண்டு .

இருக்கின்ற ஏழு ஸ்வரங்களில் நிலையானவை. மற்றவை எல்லாம் இரண்டு ஸ்தானங்கள் கொண்டவை . . (ஸ்தானம் பற்றி பிறகு பார்ப்போம்).   எடுத்துக்காட்டாக , ரி - ரி 1 , ரி 2 , க 1 , க 2 (R1, R2, Ga1, Ga2).

ஸ்வரம்                                                          Western Note

ச                                                                         C
ரி1                                                                       D flat Db
ரி2                                                                       D
க1                                                                       E Flat Db
க2                                                                       E
ம1                                                                      F
ம2                                                                      F Sharp F+
ப                                                                        G
த1                                                                      A Flat Ab
த2                                                                      A
நி1                                                                      B Flat Bb
நி2                                                                      B

-- தொடரும் ...





Monday, January 10, 2011

புகைப்படங்களின் தொகுப்பு

நான் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு : (வெவ்வேறு காலங்களில் )

                                             Seattle, WA, Sep-2009
                    Seattle, WA, Sep-2009
                                              BC, CA, Sep-2009
                       BC, CA, Sep-2009
                      Vancouver, BC, CA, Sep-2009
                      Vancouver, BC, CA, Sep-2009
                       Vancouver, BC, CA, Sep-2009
  Vancouver, BC, CA, Sep-2009
                       


                     The Butchart Gardens, BC, CA, Sep-2009
                       BC, CA, Sep-2009
                   Seattle, WA, Sep-2009

                   

 

Sunday, January 9, 2011

கர்நாடக சங்கீதம் - அறிமுகம்

இந்த வலைத்தொடரில் கர்நாடக சங்கீதத்தை பற்றி எழுதலாம் என எண்ணுகிறேன்.
முதன் முதலில், எனக்கு எந்த ஒரு முறையான பயிற்சியும் இதில் கிடையாது என்பதை தெரிவித்துக்கொண்டு ஆரம்பிக்கிறேன்.
ஆனால், நிறைய கேட்ட அனுபவமும் , நிறைய படித்த அனுபவமும் உண்டு. இது ஒரு பகிர்தல் மட்டுமே, எனவே, ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன.

1 . அடிப்படைகள்:
    மற்ற எல்லா விதமான இசைகளைப்போலவே , இதுலேயும் ஏழு ஸ்வரங்களே உள்ளது .

    ச ரி க ம ப த நி

   ஆனால், பாடும் பொழுது மட்டும் , முடிவில் இன்னொரு ச சேர்த்திக்கொள்வர்கள்.



   இந்த ஏழு ஸ்வரங்களுக்கும் ஒரு பெயரும், அர்த்தமும் உண்டு.


   - சட்சமம் 


   ரி - ரிஷபம் 


   - காந்தாரம் 


   - மத்யமம் 


   - பஞ்சமம் 


   - தைவதம் 


   நி - நிஷாதம் 


   இதற்கு நிகரான தமிழ் பெயர்கள் ஒவ்வொரு ஸ்வரத்துக்கும் உண்டு.


   ஒவ்வொரு பாடலுக்கும் பின் வரும் பகுதிகள் பொருந்தும்.


   பல்லவி 


   அனு பல்லவி (அவசியம் அன்று) 


   சரணம் - 1 

   சரணம் - 2 

   சரணம் - 3 (அவசியம் அன்று)


இது ஒரு தொடராக எழுத உள்ளேன் . எனவே, 


                               - தொடரும்...

Tuesday, January 4, 2011

பக்தி ஸ்லோகங்கள் - தொகுப்பு

இந்த பதிவில் எல்லா வகையான சுலோகங்களின் தொகுப்பை வழங்கலாம் என எண்ணி துவங்குகிறேன்.

1  . ஸரஸ்வதி ஸ்லோகங்கள் :

     சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
    வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா 

2.  விநாயகர் ஸ்லோகங்கள் :
    சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
    ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே

    கஜானனம் பூதகணாதி சேவிதம்  
    கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம்
    உமா சுதம் சோக விநாச காரணம்
    நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம்


3.  முருகன்  ஸ்லோகங்கள் :


  ஷடானனம் சந்தன லிபித காத்ரம்
  மஹோரசம் திவ்ய மயூர வாஹனம்
  ருத்ரஸ்ய ஸூனும் சுரலோக நாதம்
  ப்ரம்ஹண்ய தேவம் சரணம் ப்ரபத்யே
4.  ஹனுமான்   ஸ்லோகங்கள் :

   அசாத்திய சாதக சுவாமின் அசாத்தியம் தவ கிம் வத
   ராம துதோ கிருபா சிந்தோ மத் கார்யம் சாதக பிரப்ஹோ !!!

  புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
  அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

இன்னும் நிறைய ஸ்லோகங்களை இங்கே தொகுக்க உள்ளேன்.

Monday, January 3, 2011

Malayala Movie 'Sargam'

மலையாளப்படம் சர்கம் எனும் திரைப்படத்தின் பாடல்கள் எங்கேனும் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

எங்கே கிடைக்கும் இது போன்ற MP3 பாடல்கள்.