Pages

Thursday, January 20, 2011

கர்நாடக சங்கீதம் - அறிமுகம் -2

நான் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது இந்தத்தொடருக்கு .
-  நன்றிகள் பல

தொடரின் அடுத்த பகுதிக்குச்செல்லுமுன் , ஒரு அன்பர் எழுப்பிய வினாவிற்கு விளக்கம் தர முயலுகிறேன் .

--  கர்நாடக சங்கீதம் - என்ன விளக்கம் ? என்ன வரையறை?

சென்ற இரு நாட்களாக அதற்கான விளக்கம் தேடிக்கொண்டு இருந்தேன் .
கர்நாடக சங்கீதத்தில் நாட்டமும் , பரிச்சயமும் உள்ள என் தந்தையாரிடம் கூடக்கேட்டேன் .  நிறைய வலைத்தளங்களிலும்  தேடினேன் .  ஆனால் , தெளிவான ஒரு விளக்கம் எனக்குக்கிடைக்கவில்லை.

நான் தொகுத்த வரை :
   கர்நாடக சங்கீதம் என்பது இந்தியாவின் தொன்று தொட்ட இரு சங்கீத முறைகளில் ஒன்று.  வாத்தியங்களை விட குரல் வழி இசைக்கு முக்கியத்துவம் தந்த ஒரு முறையானது .

கர்நாடகம் என்பது 'பழைமை'யைகுறிக்கும் வழக்குச் சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்கள் அளிக்க முயலுகிறேன் . கேள்வி கேட்ட அன்பருக்கு மிக்க நன்றி .

கர்நாடக சங்கீதம் - அறிமுகம்  - தொடர்ச்சி :

கர்நாடக சங்கீதத்தில் உள்ள ஏழு ஸ்வரங்களுக்கும் சரியான மேற்க்கத்திய notes உண்டு .

இருக்கின்ற ஏழு ஸ்வரங்களில் நிலையானவை. மற்றவை எல்லாம் இரண்டு ஸ்தானங்கள் கொண்டவை . . (ஸ்தானம் பற்றி பிறகு பார்ப்போம்).   எடுத்துக்காட்டாக , ரி - ரி 1 , ரி 2 , க 1 , க 2 (R1, R2, Ga1, Ga2).

ஸ்வரம்                                                          Western Note

ச                                                                         C
ரி1                                                                       D flat Db
ரி2                                                                       D
க1                                                                       E Flat Db
க2                                                                       E
ம1                                                                      F
ம2                                                                      F Sharp F+
ப                                                                        G
த1                                                                      A Flat Ab
த2                                                                      A
நி1                                                                      B Flat Bb
நி2                                                                      B

-- தொடரும் ...





5 comments:

  1. நீங்கள் இன்னும் சற்று விளக்கமாக ஒலி இணைப்புகளுடன் எழுதலாம். கொஞ்சம் பிரயத்தனம் எடுங்கள் ப்ளீஸ். என்னைப்போன்ற ஆர்வம் உள்ளவர்களுக்காக... மிக்க நன்றி தங்கள் கட்டுரைக்களுக்கு.

    ReplyDelete
  2. நன்றி குணா,

    நன்றி ராஜா,
    இன்னும் விரிவாக விளக்க முயலுகிறேன் .

    அருள்

    ReplyDelete
  3. படித்துக்கொண்டு வருகிறேன். ராகங்களை அடையாளம் காண்பது அனுபவத்தில்தான் வரும் என்று கருதுகிறேன். சரியா?

    ReplyDelete
  4. மிகச் சரியாகச் சொன்னீர்கள் அய்யா!!!
    ஒவ்வொரு ராகத்தின் வரைமுறை அறிதலும் , பல முறை கேட்பதுமே - ராகங்களை பிரித்தறிய வழி வகுக்கும் .

    அருள்

    ReplyDelete