Pages

Thursday, June 2, 2011

பாடல்கள் , ராகங்கள் தொகுப்பு - 7




 பாடல் 
 ராகம்
  தாளம்
 இயற்றியவர்
51. கருணா நிதியே 
பௌலிதிச்ர த்ரிபுட பாபநாசம் சிவன்
52. வருவாரோ வரம் தருவாரோ
சாமாஆதி கோபால கிருஷ்ணா பாரதி 
53.பாகி ஜகத ஜனனி 
ஹம்சா நந்தினி ஆதி சுவாதி திருநாள் 
54. சந்திர சேகரா
சிந்து பைரவி ஆதி பாபநாசம் சிவன் 
55. பார்வதி நாயக 
பௌலிஆதி சுவாதி திருநாள் 
56. கஜ நாதனே 
சாரங்க ஆதி பெரியசாமி தூரன் 
57. பாரைய்ய வேங்கட 
சாவேரி மிஸ்ரா சாபு புரண்டார தாசர் 
58. ஹரிஹர சுதனே 
ஆபோகி ஆதி பெரியசாமி தூரன் 
59. சக்தி சாஹித கணபதிம் 
சங்கரா பரணம் திச்ர ஏக முத்துசுவாமி தீட்சிதர் 
60. நன்னு பாலிம்ப 
கல்யாணி ஆதி 
தியாகராஜர் 

பாடல்களின் You Tube link இங்கே வழங்கப் பட்டுள்ளது :



Monday, March 7, 2011

பாடல்கள் , ராகங்கள் தொகுப்பு - 6



 பாடல் 
 ராகம்
  தாளம்
 இயற்றியவர்
41. ஜானகி மனோஹர்ரம் மன் ஆதி மைசூர் வாசுதேவ ஆச்சர்யா
42. அயே கிரிதர பைரவி (ஹிந்துஸ்தானி) ஆதி சுவாதி திருநாள்
43.கண்ணனை பனி மனமே  ஷன்முகப்ப்ரியா  ஆதி பாபநாசம் sivan
44. ஜகதோத்தாரண  காபி  ரூபகம்  புரந்தர தாசர் 
45. ப்ரோசேவா ரேவா  ஸ்ரீ ரஞ்சனி  ஆதி  தியாகராஜர் 
46. அன்றிவு உலகம் அளந்தாய்  சிந்து பைரவி  ஆதி  ஆண்டாள் - திருப்பாவை 
47. மஹா கணபதிம்  நாட்டை  ஆதி  முத்துசுவாமி தீட்சிதர் 
48. கோவர்தன கிரிதர கோவிந்தா  தர்பாரி கனடா  த்ரிபுட  நாராயண தீர்த்தார் 
49. யாதவ நீபா யது குல  ஹம்சத்வனி / கர்நாடக தேவ காந்தாரி  ஆதி 
புரந்தர தாசர் 
50. கல்லார்க்கும் கற்றவர்க்கும்  செஞ்சுரிட்டி  மிஸ்ரா சாபு 
ராம லிங்க சுவாமிகள் 

பாடல்களின் You Tube link இங்கே வழங்கப் பட்டுள்ளது :

42. Ayee கிரிதர

43. கண்ணனை பனி மனமே

44. ஜகதோத்தாரண

45. ப்ரோசேவா ரேவா

46.

47. மஹா கணபதிம்

48. கோவர்தன கிரிதர கோவிந்தா


50. 


தொடரும் .....

Tuesday, March 1, 2011

Carnatic Music Composers Montage Picture

வலை உலக நண்பர் SurveySan அவர்களின் 'How to do Collage of Pictures' வழிமுறை உபாயத்தில் , இங்கே கர்நாடக சங்கீத மேதைகளின் புகைப் படங்களை தொகுத்து உள்ளேன் . மேலும், சிலரின் படங்களையும் தொகுக்க வேண்டும் .



Tuesday, February 15, 2011

பாடல்கள் , ராகங்கள் தொகுப்பு - 5



 பாடல் 
 ராகம்
  தாளம்
 இயற்றியவர்
 31. ஹரி ச்மரனே மாடோ
 யமன் கல்யாணி
 ஆதி
 புரந்தர தாசர் 
32. அம்பா நீ இறங்க
 அடானா
 ஆதி 
 பாபநாசம் சிவன் 
33. வருவரோ வரம் தருவாரோ 
ஷ்யாமா 
 ஆதி 
கோபால கிருஷ்ணா பாரதியார் 
34.சக்கனி ராஜா 
கரஹரப் பிரியா
ஆதி 
தியாகராஜர் 
35. மானச சன்சரரே 
ஷ்யாமா 
ஆதி 
சதாசிவ பிரம்மேந்திரர் 
36. ஆனந்த தாண்டவம் ஆடுவார்
பூர்வி கல்யாணி
ரூபகம் 
நீலகண்ட சிவன் 
37. எப்போ வருவாரோ
ஜோன் புரி 
ஆதி 
கோபால கிருஷ்ணா பாரதியார் 
38.மன நிலையறியனடி 
பாகேஸ்வரி 
ஆதி 
அம்புஜம் கிருஷ்ணன் 
39. உன் முகம் காணவும்
ராக மாலிகா 
ஆதி 

40. வள்ளி கணவன் 
செஞ்சுருட்டி 
ஆதி


பாடல்களின் You Tube link இங்கே வழங்கப் பட்டுள்ளது :

You Tube link : hari smarane mado

You tube link : Amba Nee Iranga 
 
You tube link : Chakkani Raja

You tube Link : Maanasa Sachanrare

You tube link : anandha thandavam aaduvar

You tube link : Eppo Varuvaro

Raaga Link : Mana Nilaiyariyenadi

Raaga Link : Un Mugam Kanavum

You Tube Link : Valli Kanavan




-- தொடரும் ... 
..

Sunday, February 13, 2011

(13-Feb-2011) செய்திகள் வாசிப்பது.....


பொது:

இந்தியாவில் , ரியல் எஸ்டேட் வளர்ச்சி சமீப காலங்களில் வியக்க வைக்கிறது . அதே சமயம் , வட அமெரிக்க மற்றும் ஐரோப்பா கண்டங்களில் இது வீழ்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.
.


அரசியல்:

எகிப்த்தில்  நடை பெரும் புரட்சி நிகழ்வுகள் பல திருப்பங்களை சந்தித்திருக்கிறது . இறுதியில் மக்களின் எழுச்சி வென்றிருக்கிறது . தகவல் தொழில் நுட்பம் பெரிதும் உதவி இருக்கிறது .

தமிழகத்தில் , வரும் மே மாதத் தேர்தலை முன்னிட்டு , அரசியல் விளையாட்டுகள் துவங்கி, இரண்டாம் கட்டத்தை அடைந்து இருக்கிறது .


விளையாட்டு:

 அமெரிக்காவில்   'Super Bowl'  நடை பெற்றது . 'Green Bay Packers' என்னும் அணி வெற்றி பெற்றது . இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் , அந்த அணி ஒரு தனி மனிதருக்கு உரிமையானது அல்ல . அந்த சின்ன ஊரின் பல்லாயிரம் மக்கள் 'பங்கு' பெரும் நிறுவனமாக உள்ளது . கடும் குளிரையும் பொருட்படுத்தாது அம்மக்கள் வெற்றியைக் கொண்டாடினார்கள் .

கிரிக்கெட் வேர்ல்ட் கப் ஆட்டங்களுக்கான ஆரவாரம் , விளம்பரங்கள் , tv  ஒளிபரப்பு முதலியவை ஆரம்பித்துவிட்டன .

இயல்,இசை & நாடகம்:

'பயணம்'  ராதா மோகனின் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டி உள்ளது . அவர் , அவருடைய 'safe zone' வெளியே வந்து ஒரு திரைப் படம் தந்திருக்கிறார் .

வட அமெரிக்காவின்   இசை உலகின் உயரிய விருதான 'Grammy' நிகழ்ச்சி இன்று நடை பெற உள்ளது .

வணிகம்:
அமெரிக்காவில், verizon phone நிறுவனம் , தனது iPhone ஐ களத்தில் இறக்கி இருக்கிறது. அதன் விற்பனை நிலவரம் எல்லாரும் எதிர் பார்த்ததைப் போன்று பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்தவில்லை .


உலக அளவில் 'crude oil' விலை உயர்ந்து இருக்கிறது . எகிப்தின் அரசியல் நிலை உட்பட பல காரணங்கள் சொல்லப் படுகிறது .


தொழில் நுட்பம்:


வரும் காலங்களில், தகவல் தொழில் நுட்பம் உலகளாவிய நிகழ்வுகளுக்கும் , புரட்சிக்கும் பெரும் உதவி புரியும் எனத் தோன்றுகிறது .

-- தொடரும் 


Friday, February 11, 2011

பாடல்கள் , ராகங்கள் தொகுப்பு - 4

     பாடல்                                                   ராகம்                                தாளம்              இயற்றியவர்

26. சபாபதிக்கு வேறு                                 அடானா                                    ஆதி                           கோபால   
                                                                                                                                                            கிருஷ்ணா  
                                                                                                                                                             பாரதியார் 

You Tube link : Sabhapathikku Veru Deivam

27. நகுமோமு                                             ஆபேரி                                       ஆதி                           தியாகராஜர்  

You Tube link : Nagumomu



28. நல்லதோர் வீணை செய்தே            தேஷ்                                           ஆதி                            பாரதியார் 


You Tube Link : Nallathor Veenai 
 
29. எத்தனை கோடி இன்பம்                   திலாங்                                        ஆதி                           பாரதியார் 


You Tube Link : Ethanai Kodi Inbam Vaithai


30. தேடி உனைச் சரணடைந்தேன்      சிவ ரஞ்சனி                             ஆதி                          பாரதியார்


You Tube Link :
-- தொடரும் ...
 
..

Tuesday, February 8, 2011

கர்நாடக சங்கீதம் - அறிமுகம் -3

கர்நாடக சங்கீதம் - அறிமுகம்  - தொடர்ச்சி :

சரி , அடுத்த பகுதிக்குப் போவோம் .



இது வரை , சில விளக்கங்களைப் பார்த்தோம் .
--  ஏழு ஸ்வரங்கள்
--  ஒரு பாட்டின் கட்டமைப்பு  (பல்லவி, அனு பல்லவி , சரணம் -1 , சரணம் -2 )
--  ஏழு ஸ்வரங்களுக்கும் சரியான மேற்க்கத்திய நோட் .


இனி மேல் ,


ஏற்கனவே சொன்னது போன்று , ஏழு ஸ்வரங்களில் ச மற்றும் ப நிலையானவை. மற்ற ஐந்துக்கும் 2  ஸ்தானங்கள் உண்டு . ஆக, மொத்தம் 12 ஸ்வர ஸ்தானங்கள் .


கர்நாடக சங்கீதத்தில் , முக்கிய "ஸ்தாயி" ஆக "மத்திய" ஸ்தாயி சொல்லப்படுகிறது . 
(We can equate Middle-C in the Western Music system).
"மத்திய" ஸ்தாயிக்கு ஒரு படி மேலே உள்ளது "தர" ஸ்தாயி .
"மத்திய" ஸ்தாயிக்கு ஒரு படி கீழே உள்ளது "மந்திர" ஸ்தாயி ( manthras are normally chanted in low-frequencies).

மேள கர்த்தா முறை:

17 ஆம் நுற்றாண்டு வாக்கில் , 'வேங்கட மகி ' என்கிற இசைப் புலவர் பொதுவாக ராகங்களை வகைப் படுத்தும் முறையை செழுமைப் படுத்தினார்.
அந்த முறை 'மேள கர்த்தா' முறை என அழைக்கப் படுகிறது.  இந்த முறையை 'அட்டவணை' போன்று ஏற்படுத்தினார்.
 ஹிந்துஸ்தானியில் ,  இதற்கு நிகரானது 'thaat' என அழைக்கப் படுகிறது . 72 ராகங்கள் இந்த முறையில் அமைந்தவை. இவற்றுக்கு 'சம்பூரண ராகங்கள்' எனவும் பெயர் உண்டு.

ஒரு ராகம் 'மேள கர்த்தா' முறையின் கீழ் வர, சில விதிகளை ஒற்றி இருக்க வேண்டும். 

1. 'ச' ஸ்வரம் கட்டாயம் இருக்க வேண்டும்.

2. 'ப' ஸ்வரமும் கட்டாயம் இருக்க வேண்டும்.

3. 'ம' ஸ்வரங்களில் ஒன்று இருக்க வேண்டும் (ம1 அல்லது ம2).

4. ஒரு 'ர' வும் , ஒரு 'க' வும் இருக்க வேண்டும்.

5. ஒரு 'த'வும் , ஒரு 'நி' யும் இருக்க வேண்டும்.

6. 'க' வுக்கு முன் 'ர' வும் , 'நி' க்கு முன் 'த' வும் வர வேண்டும்.

இப்படி மேற்கூறிய விதிகள் மூலம் , 72 (2 x 6 x 6) ராகங்கள் கிடைக்கின்றன .

மேலோட்டமாக , இந்த 72 ராகங்களை , இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம் .
அவை 'சுத்த மத்யமம்' மற்றும் 'பிரதி மத்யமம்'. ஒவ்வொரு பிரிவுக்கும் 36 ராகங்கள் .  'சுத்த மத்யமா' த்தில் 'ம1' வும் , 'பிரதி மத்யமா' த்தில் 'ம2' பயன் படுத்தப் படுகிறது. 

இதன் பிறகு, விரிவாக பிரித்தோம் என்றால் ,  12 பிரிவுகளாக பிரிக்கலாம் . அவை 'சக்ரா' என அழைக்கப்படும் . ஒவ்வொரு 'சக்ரா' க்கும் , 6 ராகங்கள் .

அந்த 'சக்ரா' க்கள் :

1. இந்து சக்ரா 

2. நேத்ரா சக்ரா 

3. அக்னி சக்ரா 

4. வேதா சக்ரா 

5. பான சக்ரா (Related to manmadha)

6. ருது சக்ரா 

7.  ரிஷி சக்ரா 

8.  வாசு சக்ரா 

9. பிரம சக்ரா 

10.  டிசி (திசை ) சக்ரா 

11.  ருத்ர சக்ரா

12.  ஆதித்ய சக்ரா 

இங்கே மொத்த 'மேள கர்த்தா' அட்டவணை:

1.  இந்து சக்ரா :

   கனகாங்கி
   ரத்னாங்கி 
   கானமூர்த்தி
   வனஸ்பதி 
   மானவதி
   தனருபி
  
2. நேத்ரா சக்ரா:
   சேனாவதி
   ஹனுமதோடி 
   தேனுகா
   நாடகப்ரியா
   கோகிலப்ரியா 
   ரூபாவதி

3.  அக்னி சக்ரா 

   காயகப்ரியா 
   வகுலபாரணம் 
   மாயாமாளவகௌள
   சக்ரவாகம் 
   சூர்யகாந்தம் 
   ஹடகம்பாரி


4.  வேதா சக்ரா:
   
     ஜ்ஹங்கரத்வனி 
     நடபைரவி 
     கீரவாணி 
     கரஹரப்ப்ரியா 
     கெளரி மனோஹரி 
     வருண ப்ரியா 
       
5.   பான சக்ரா :

      மர ரஞ்சனி 
      சாரு கேசி 
      சர சாங்கி 
      ஹரி காம்போகி 
      தீரா சங்கராபரணம் 
      நாக நந்தினி 

6.  ருது சக்ரா :
 
     யாக ப்ரியா 
     ராக வர்தினி 
     காங்கேய பூஷணி 
     வாகதீஸ்வரி 
     ஷுலினி 
     சாலநட

7.  ரிஷி சக்ரா :

     சாலகம் 
     ஜலர்ணவம் 
     ஜ்ஹலவரலி 
     நவநீதம் 
     பாவனி
     ரகுப்ரியா 

8.  வாசு சக்ரா:

     கவம்போதி 
     பாவப்ரியா
     சுப பந்துவராளி 
     ஷட்விதமர்கினி 
     சுவர்ணாங்கி 
     திவ்யமணி 

9. பிரம்மா சக்ரா :

     தவலம்பரி 
     நாம நாராயணி
     காம வர்தனி
     ராம ப்ரியா
     கமனஸ்ராம 
     விஸ்வம்பரி 

10. டிசி சக்ரா (திசை )

      ஷமளாங்கி 
      ஷண்முக ப்ரியா
      சிம்மேந்திர மத்யமம் 
      ஹேமவதி
       தர்மவதி 
       நீதிமதி 
   
11.  ருத்ர சக்ரா :
  
       கண்ட மணி 
       ரிஷப ப்ரியா 
       லதாங்கி 
       வாசஸ்பதி 
       மெச்சகல்யாணி 
       சித்ராம்பரி 

12.  ஆதித்ய சக்ரா :

        சுசரித்ரா 
        ஜோதி ஸ்வருபிணி
        தடுவர்தினி 
        நசிக பூஷணி 
        கோசலம் 
        ரசிக ப்ரியா 

இந்த 'அட்டவணை' யை , இன்னும் படமாக (visualize) காண வேண்டுமென்றால் , கீழ் வரும் சுட்டியை தொடரவும் 


மேலே சொல்லப் பட்ட ராகங்கள் அனைத்தும் 'சம்பூரண' ராகங்களாகும் . (ஏழு ஸ்வரங்களும் உள்ளன ).

இதனுடைய பகுதி ராகங்கள் (subset ) 'ஜன்ய' ராகங்கள் எனப் படும். 

அடுத்த பகுதியில் ,
  - தாளம், அதன் வரலாறு 
  - சுருதி 
 - ஆரோஹனம் 
 - அவரோஹனம் 
 - பாடல் இயற்றியவர்கள் 


-- தொடரும் .....