Pages

Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Sunday, February 13, 2011

(13-Feb-2011) செய்திகள் வாசிப்பது.....


பொது:

இந்தியாவில் , ரியல் எஸ்டேட் வளர்ச்சி சமீப காலங்களில் வியக்க வைக்கிறது . அதே சமயம் , வட அமெரிக்க மற்றும் ஐரோப்பா கண்டங்களில் இது வீழ்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.
.


அரசியல்:

எகிப்த்தில்  நடை பெரும் புரட்சி நிகழ்வுகள் பல திருப்பங்களை சந்தித்திருக்கிறது . இறுதியில் மக்களின் எழுச்சி வென்றிருக்கிறது . தகவல் தொழில் நுட்பம் பெரிதும் உதவி இருக்கிறது .

தமிழகத்தில் , வரும் மே மாதத் தேர்தலை முன்னிட்டு , அரசியல் விளையாட்டுகள் துவங்கி, இரண்டாம் கட்டத்தை அடைந்து இருக்கிறது .


விளையாட்டு:

 அமெரிக்காவில்   'Super Bowl'  நடை பெற்றது . 'Green Bay Packers' என்னும் அணி வெற்றி பெற்றது . இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் , அந்த அணி ஒரு தனி மனிதருக்கு உரிமையானது அல்ல . அந்த சின்ன ஊரின் பல்லாயிரம் மக்கள் 'பங்கு' பெரும் நிறுவனமாக உள்ளது . கடும் குளிரையும் பொருட்படுத்தாது அம்மக்கள் வெற்றியைக் கொண்டாடினார்கள் .

கிரிக்கெட் வேர்ல்ட் கப் ஆட்டங்களுக்கான ஆரவாரம் , விளம்பரங்கள் , tv  ஒளிபரப்பு முதலியவை ஆரம்பித்துவிட்டன .

இயல்,இசை & நாடகம்:

'பயணம்'  ராதா மோகனின் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டி உள்ளது . அவர் , அவருடைய 'safe zone' வெளியே வந்து ஒரு திரைப் படம் தந்திருக்கிறார் .

வட அமெரிக்காவின்   இசை உலகின் உயரிய விருதான 'Grammy' நிகழ்ச்சி இன்று நடை பெற உள்ளது .

வணிகம்:
அமெரிக்காவில், verizon phone நிறுவனம் , தனது iPhone ஐ களத்தில் இறக்கி இருக்கிறது. அதன் விற்பனை நிலவரம் எல்லாரும் எதிர் பார்த்ததைப் போன்று பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்தவில்லை .


உலக அளவில் 'crude oil' விலை உயர்ந்து இருக்கிறது . எகிப்தின் அரசியல் நிலை உட்பட பல காரணங்கள் சொல்லப் படுகிறது .


தொழில் நுட்பம்:


வரும் காலங்களில், தகவல் தொழில் நுட்பம் உலகளாவிய நிகழ்வுகளுக்கும் , புரட்சிக்கும் பெரும் உதவி புரியும் எனத் தோன்றுகிறது .

-- தொடரும் 


Tuesday, February 1, 2011

கிரிக்கெட் உலகக்கோப்பை 2011 - பயனுள்ள வெப் சைட்

கீழே உள்ள வெப் சைட் , மிக பயனுள்ளதாகவும் , தெளிவாகவும் உள்ளது .

http://www.cricbuzz.com/cricket-schedule/series/228/icc-world-cup-2011

வலையுலக நண்பர்களுக்கு பயன் படும் என நம்புகிறேன் .



Sunday, January 30, 2011

(30-Jan-2011) செய்திகள் வாசிப்பது.....

இன்று முதல் வாரம் ஒரு முறை , அனைத்து அந்த வார நிகழ்வுகளையும் தொகுத்து வழங்க உள்ளேன் . பதிவுலக வாசகர்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன் .

பொது:

வட கிழக்கு அமெரிக்கா, சென்ற வாரத்தில் மற்றொரு பெரிய பனிப்பொழிவை சந்தித்தது . சென்ற வருடங்களை விட , அங்கு இந்த வருடம் பனிப்பொழிவு அதிகம் .

தமிழகம் அடுத்த கோடைக்குத் தயாராகி வருகிறது . இப்பொழுதெல்லாம் பிப்ரவரி , மார்ச் மாதங்களிலேயே கோடையின் வெப்பம் உணரப்படுகிறது .

இன்று மகாத்மா காந்தியின் நினைவு நாள் . எத்தனை பேருக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ தெரிய வில்லை . ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று 'சத்திய சோதனை' .

அரசியல்:

தமிழகம் அடுத்த பொதுத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறது . இனி வரும் நாட்களில் எல்லா வாதமான அரசியல் வேடிக்கைகளும் நடக்கும், பார்க்கலாம் .
இந்த தேர்தலில் மின்னணு எந்தரமா , வாக்குச்சஈட்டா , எத்தனை கட்ட வாக்குப்பதிவு , விவரங்கள் தெரிய வரும் கூடிய விரைவில். 

மற்றுமொரு தமிழக மீனவன் சாவு , மிகுந்த வேதனையை அளிக்கிறது .  என்று நிற்கும் இந்த வேதனை, இந்த தொடர் வன்முறை ? யார் வருவார்  தீர்வு காண ?

ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான எகிப்த்தில் கடந்த ஒரு வாரமாக நடை பெரும் நிகழ்வுகள் ஒரு பெரிய 'மாற்றத்துக்கு' வழி வகுக்குமா என இனி வரும் வாரங்களில் 
தெரிய வரும்.  மக்களின் உயிரிழப்பு பெரும் வேதனை அளிக்கிறது . மக்களும், அவர்களுடைய ஒரு மித்த குரலையும் மீறி வேறு ஒன்றும் இல்லை என்பது புலனாகிறது .

அமெரிக்கா அதிபரின் 'State of the Union'  பேச்சு , வரும் நாட்களில் 'பொருளாதார' மாற்றத்தை ஏற்படுத்துமா என தெரிய வில்லை .

விளையாட்டு:

 அமெரிக்கா அடுத்த 'Super Bowl' க்கு தயாராகி வருகிறது . அடுத்த ஞாயிறு இறுதிபோட்டி.

இந்தியாவில் , IPL தொடருக்கான வேலைகள் , விளம்பரங்கள் ஆரம்பித்து விட்டன .

' Kim Clijsters' இன் ஆசி வெற்றி பிரமிக்க வைக்கிறது . மகப்பேறுக்கு பிறகு கிடைக்கும் மூன்றாவது பெரிய வெற்றி இது. 
'Nadal' மற்றும்  'Federer'  தோல்வி அதிர்ச்சியானது .

இந்தியாவின் 'பூபதி' மற்றும் 'பயஸ்' இரட்டையர் இறுதிச்சுற்று தோல்வி வருத்தமே.

இயல்,இசை&நாடகம்:

ரஹ்மான் மற்றுமொரு அவார்டு பெற்றது மிக்க மகிழ்ச்சி . 
ஆஸ்கார்க்கு முன்னோட்டம் என அழைக்கப்படும் 'SAG' awards, இன்று நடை பெறுகிறது .

'கோ' படப் பாடல்கள் , மற்றுமொரு ஹரிஸ் ஜெயராஜின் ஹிட் படைப்பு எனத் தொன்றுகிறது.

வணிகம்:

உலக பொருளாதார மாநாடு இன்று முடிவடைந்தது. சந்திரா கொச்சார் (ICICI Bank) மற்றும் விப்ரோ பிரேம்ஜின் பேட்டிகள் அருமை .

உலக அளவில் , கச்சா எண்ணையின் விலை ஏற்றம் வருந்த வைக்கிறது .

தொழில் நுட்பம்:

போன் நம்பர் போர்டிங் இந்தியாவில் மிக முக்கிய நிகழ்வாகும் . மிக வரவேற்க தக்கது .

motorola வின் 'Zoom' tablet கணிப்பொறி , google- இன் 'Honey Comb' ஐ அடிப்படையாகக்கொண்டது .விரைவில் வெளி வரும்.

-- தொடரும் 


Thursday, January 27, 2011

சிந்திக்க வைத்த புத்தாண்டு வாழ்த்துகள்

என்னுடைய குடும்ப நண்பர் ஒருவர் , இதை எனக்கு இமெயிலில் அனுப்பினார்.
(நன்றி: திரு. ஆறுமுகம் , திரு.சுப்ரமணியன் )
படிக்க, சிந்திக்க:

உறவுகள் மேம்பட
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்....
குடும்பத்திலும் சரி  அலுவகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகமல் இருக்கவும் கடைப்பிடிக்க வேண்டியவை.

-=-==============================================================

  • நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
  • அர்த்தமில்லாமலும், பின் விளைவுகளை அறியாமலும் பேசிக்கொண்டே இருப்பதை விடுங்கள்.
  • எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசூக்காகக் கையாளுங்கள். விட்டுக் கொடுங்கள்
  • சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணருங்கள்.
  • நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள் குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
  • உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்லவும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
  • மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.
  • அளவுக்கதிகமாய், தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
  • எல்லாரிடத்திலும் எல்லா விஷயங்களை அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிரூக்காதீர்கள்.
  • கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்
  • அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள்.
  • உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
  • மற்றவர் கருத்துகளில் செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்
  • மற்றவர்களுக்குரிய மரியாதையைக் காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
  • புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாததுபோல் நடந்துகொள்ளாதீர்கள்.
  • பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும்  காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
  • அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
  • பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சைத் துவக்க முன்வாருங்கள்.
சென்ற 2010-ஆம் ஆண்டில் நாம் கடைப்பிடிக்கவிட்டுப் போனவற்றை 2011-ஆம் ஆண்டில் கடைப் பிடிப்போம்.
வெ.சுப்பிரமணியன்
ஓம்

Monday, January 10, 2011

புகைப்படங்களின் தொகுப்பு

நான் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு : (வெவ்வேறு காலங்களில் )

                                             Seattle, WA, Sep-2009
                    Seattle, WA, Sep-2009
                                              BC, CA, Sep-2009
                       BC, CA, Sep-2009
                      Vancouver, BC, CA, Sep-2009
                      Vancouver, BC, CA, Sep-2009
                       Vancouver, BC, CA, Sep-2009
  Vancouver, BC, CA, Sep-2009
                       


                     The Butchart Gardens, BC, CA, Sep-2009
                       BC, CA, Sep-2009
                   Seattle, WA, Sep-2009

                   

 

Thursday, December 30, 2010

என்ன ஒரு அழகான வார்த்தைகள்!!!

“There are a hundred reasons to cry but a thousand reasons to smile!”

எங்கே  இதை செய்ய , நினைவில் கொள்ள ஆரம்பிப்பது?


இது போன்ற வார்த்தைகள் வாழ்வில் நிறைய பேருக்கு ஒரு புத்துணர்வை கொடுக்கும் .


அடியேனும் இந்த புத்தாண்டில் இருந்து சில விஷயங்களில் இந்த எண்ணத்தை கடை பிடிக்கலாம் என எண்ணுகிறேன் .



Friday, January 15, 2010

இது தேவையா?

வீட்ல ஒரு வேலை செய்ய மாட்டேங்கறா. அவ குடிச்ச காபி டம்ளரைக்கூட எடுத்து வைக்க மாட்டேங்கறா. வீடு குப்பையா இருந்தாலும் சரி, மாலை மாலையா கொடியில துணி தொங்கினாலும் சரி... எதையும் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டேங்கறா..."


- வயதுக்கு வந்த பெண்கள் இருக்கும் பெரும்பாலான வீடுகளில் கேட்கும் புலம்பல் இது!

பையன்கள் மட்டும் என்ன குறைச்சலா?

"ராத்திரி முழுக்க கிரிக்கெட் பார்த்துட்டு, பகல் முழுக்க தூங்கறான். ஆத்திர, அவசரத்துக்கு கடையில போய் ஏதாவது மளிகை சாமான்கள் வாங்கி வாடானாக்கூட, காதுல வாங்க மாட்டேங்கறான். வயசு பசங்க எல்லாம் ஏன்தான் இப்படி இருக்காங்களோ!"

- பையன்களும் தங்கள் பங்குக்கு அம்மா -அப்பாக்களை இப்படி புலம்ப வைக்கத் தவறுவதில்லை!

இதற்குள் நுழையும் முன்பாக என் அனுபவக் கதை ஒன்றைப் பேசிவிடுவோம்.

எங்கள் வீடு, மிகவும் கண்டிப்பான வீடு. வார நாள், விடுமுறை நாள், என்ற எந்த பேதமும் இல்லாமல் எல்லோரும் காலை ஐந்து மணிக்கு எழுந்து யோகா, வாக்கிங், பேட்மிட்டன் என்று அவரவர்களுக்குப் பிடித்த உடற்பயிற்சியை செய்துவிட்டு, எட்டு மணிக்குள் குளித்து சாமி கும்பிட்டுவிட்டு அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பி விடுவோம்.

இந்தச் சூழ்நிலையில், எங்களின் தூரத்து உறவினர் ஒருவர், விருந்தாளியாக வந்து சேர்ந்தார். அடுத்தவர் பேசுவதை அதிகமாகக் காது கொடுத்து கேட்காத அப்பாகூட, விருந்தாளி பேசுவதை உன்னிப்பாக கேட்க ஆரம்பித்தார். காரணம்... உலக விஷயத்தில் இருந்து உள்ளூர் விஷயம் வரை எல்லாவற்றையும் விரல் நுனியில் வைத்திருந்தார் விருந்தாளி. வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு தினம் தினம் புதுப்புது கதைகள் சொன்னதில் குழந்தைகள் அத்தனை பேரும் மகுடிக்கு மயங்கிய பாம்பு போல ஆகிப் போனார்கள். ஆன்மிகம், ஜோசியம் ஆகியவற்றில் கரைகண்டவராகவும் இருந்ததால்... தாத்தா-பாட்டிகூட பெரும்பாலான நேரத்தை அவரோடு சந்தோஷமாகக் கழித்தார்கள். கிரிக்கெட், டென்னிஸ் என்று விளையாட்டுகளிலும் பெரிய கில்லியாக இருந்ததால்... எங்கள் வீட்டு வாலிபர்கள் அத்தனை பேரும் அவரையே சுற்றி வந்தார்கள்.

என்னதான் பெரிய மனிதனாக இருந்தாலும் வீக் பாயின்ட்ஸ் இல்லாமல் இல்லை. மனுஷனுக்கு சபை நாகரிகம் கொஞ்சம்கூடத் தெரியாது. வீட்டுக்கு புதிதாக யாராவது நண்பர்கள் வந்தால்கூட, பேசுவதை நிறுத்த மாட்டார். அதைவிடக் கொடுமை என்னவென்றால்... பக்கத்தில் சின்ன குழந்தைகள் இருக்கிறார்களா... இல்லையா என்றுகூட பார்க்காமல், செக்ஸ் ஜோக்ஸ் எல்லாம் அடித்துத் தொலைப்பார்.

அவர் வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே படிப்பதற்காக வெளியூர் சென்ற நான், அப்படியே வேலை, வெளிநாடு என்று பத்து வருடங்கள் கழித்துதான் விடுமுறையில் ஊர் திரும்ப முடிந்தது. அத்தனை வருடங்களாக உரிமையோடு எங்கள் வீட்டிலேயேதான் தங்கியிருந்தார் விருந்தாளி. தன்னுடைய பாணியிலேயே சத்தமாக 'தொணதொணÕவென்று பேசிக்கொண்டேஇருந்தார். எப்போதும் சுறு சுறுப்பாக இருக்கும் அப்பா, அம்மா, தங்கை, தம்பி என்று எல்லோரும் அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் முகத்தில் முன்பு இருந்த உற்சாகத்துக்கு பதிலாக சலிப்பே மேலிட்டிருந்தது.

கோயில், குளம், உபன்யாசம், கச்சேரி என்று வெளியே போய் வரும் அப்பாவும் அம்மாவும்கூட அந்தப் பழக்கங்களை முற்றிலுமாக மறந்துவிட்டிருந்தார்கள். உறவினர் வீடு, நண்பர்கள் வீடு என்று அடிக்கடி வெளியே போய் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் அண்ணி, அண்ணனும் அதையெல்லாம் மறந்துவிட்டு இந்த விருந்தாளி சொல்லும் கதைகளை கேட்பதிலேயே நேரத்தை செலவழிப்பது தெரிந்தது. ஆக, விருந்தாளியால்... ஸாரி... வீட்டு ஆளாகிவிட்ட அந்த நபரால் மொத்தக் குடும்பமும்... சோம்பேறி குடும்பமாக உருமாறிப் போயிருந்தது. அந்த விருந்தாளியின் பெயர்... டெலிவிஷன்!
ஆம்... சேனல் மாற்றி சேனல் சீரியல் பார்க்கும் அம்மாக்களும், வீட்டில் இருக்கும் நேரத்தில்கூட டி.வி. முன் ஸ்போர்ட்ஸ், நியூஸ் என தவம் கிடைக்கும் அப்பாக்களும் 'ஒரு வேலையும் செய்ய மாட்டேங்கறாங்க' என்று தங்கள் பிள்ளைகளை குறை சொல்லிக்கொள்வதில் அர்த்தமில்லை.

டி.வி. நமக்கு அறிவுபூர்வமான பல தகவல்களையும், தரமான ரசனைக்கான நிகழ்ச்சிகளையும் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதை மட்டுமே பார்ப்பவர்களின் சதவிகிதம் மிகக்குறைவு! குத்தாட்ட நடன நிகழ்ச்சிகளையும், மற்றவர்களை காயப்படுத்தும் நகைச்சுவையையும், குழந்தைகளின் வயதுக்கு மீறிய அன்சென்ஸார்ட் விஷயங்களையும், 'அழு, அழ வை' என்று போதிக்கும் சீரியல்களையும் பார்ப்பவர்கள்தான் அதிகம்!

எனவே, கொஞ்சம் அந்த மாயப்பெட்டியை விட்டு வெளியே வாருங்கள். தூய காற்று வீசும் கடற்கரை, சாமரம் வீசும் மரங்கள் நிறைந்த பூங்கா, இசைக் கச்சேரி, கோயில் திருவிழா, சுபகாரியம் நடக்கும் உற்றார்-உறவினர் வீடுகள், நண்பர்கள், குழந்தைகள்... என்று உலகில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன ஆரோக்கியமான ரசனைக்கு. அவற்றைஎல்லாம் ரசியுங்கள். கண்கள் தேய வைக்கும் அந்த கண்ணாடித் திரையை அணைத்துவிட்டு உங்கள் குழந்தைகளிடம் பேசுங்கள்! அவர்களின் பள்ளி, கல்லூரி, நண்பர்கள், விருப்பங்களைப் பற்றியெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்! அவர்களும் உங்களுக்குக் காது கொடுப்பார்கள்... நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள்... உங்கள் விருப்பங்களை பரிசீலிப்பார்கள்... அதன்படி நடப்பார்கள்!

ஆஃப் செய்வோமா அந்த வண்ணப்பெட்டியை?

Courtesy :Aval Vikatan